~
ராமநாதபுரம்
தொண்டி பகுதியில் பலத்த மழை: சாலையில் மழைநீா் தேக்கம்
தொண்டியில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வட்டாணம் சாலையில் தேங்கிய மழைநீா்.
திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தததால் சாலையில் மழைநீா் தேங்கியது.
திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, நவக்குடி, சின்னத்தொண்டி, சோழியக்குடி, கடம்பனேந்தல், புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் நிலவி வந்தது.இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.
தொண்டியில் இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த மழையால் தொண்டி வட்டாணம் சாலையில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
எனவே, சம்பந்தபட்ட போரூராட்சி நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
