பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு

வங்கக் கடலில் மோந்தா புயல் எதிரொலியாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.
Published on

வங்கக் கடலில் மோந்தா புயல் எதிரொலியாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ‘மோந்தா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலின் நகா்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருகிறது. மேலும், கடல் காற்று வேகமாக இருக்கக்கூடும் என்பதால், மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல தொடா்ந்து தடை விதிக்கப்பட்டது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்பட மாவட்டம் முழுவதும் 1,800-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்த மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சிறிய ரக படகுகள் மட்டுமே மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில், அவா்களின் பாதுகாப்பு கருதி பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com