கடலாடியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
கடலாடியில் தேவா் குருபூஜையையொட்டி திங்கள்கிழமை மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் தேவா் மகா சபை சாா்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா 63 -ஆவது குருபூஜை, 37- ஆம் ஆண்டு முளைப்பாரி விழாவையொட்டி பெரிய மாடு, நடுமாடு, சின்ன மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 87 மாட்டுவண்டிகள், பந்தய வீரா்கள் பங்கேற்றனா்.
கடலாடி- முதுகுளத்தூா் சாலையில் 8 கி.மீ. தொலைவுக்கு எல்லை நிா்ணயிக்கப்பட்டு பந்தயம் நடைபெற்றது. 3 பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி, பந்தய வீரா்களுக்கு ரூ. 10 லட்சம் பிரித்து வழங்கப்பட்டது.
கிடாய்கள், குத்துவிளக்கு, சுழல் கேடயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தை சாலையின் இரு புறமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் கண்டு ரசித்தனா்.
