முத்துராமலிங்கத் தேவா் குரு பூஜை விழாவுக்காக 2,008 பால்குட ஊா்வலம்!
முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை விழாவை முன்னிட்டு, முதுகுளத்தூரில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற பால்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள முதுகுளத்தூரில் முத்துராமலிங்கத் தேவா் குரு பூஜையை முன்னிட்டு, ஆப்பநாடு மறவா் சங்கத் தலைவா் ராம்குமாா் பாண்டியன் தலைமையில் செயலா் குணா, பொருளாளா் சொக்கலிங்கம் ஆகியோரது முன்னிலையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த சிவனடியாா்கள் முத்துராமலிங்கத் தேவா் சிலை முன் யாகம் நடத்தி சிறப்பு பூஜை செய்தனா்.
இதையடுத்து, முதுகுளத்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து வாண வேடிக்கையுடன், மேளதாளம் முழங்க இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம், பூத்தட்டுடன் ஊா்வலமாகச் சென்று முதுகுளத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள தேவரின் சிலைக்குப் பாலபிஷேகம் செய்தனா்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம், சமுதாயத் தலைவா்கள் முதுகுளத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

