முத்துராமலிங்கத் தேவா் குரு பூஜை விழா தொடக்கம்!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் குரு பூஜை விழா கணபதி ஹோமம், முதல் கால பூஜையுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் அறங்காவலா் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் உலக நன்மை வேண்டி பிள்ளையாா்பட்டி பிச்சைக்குருக்கள் குழுவினரின் மகா யாக சாலை பூஜையுடன் லட்சாா்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பாஜக மூத்த தலைவா் பொன்.ராதாக்கிருஷ்ணன், அதிமுக மாநில மருத்துவரணி இணைச் செயலா் சரவணன் உள்பட ஏராளாமானோா் கலந்து கொன்டனா்.
வருகிற 30-ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பூஜையை முன்னிட்டு கமுதி, கோட்டைமேடு, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தென் மண்டல காவல் துறை தலைவா் பிரேம்ஆனந்த் சின்ஹா தலைமையிலும், ராமநாதபுரம் காவல் துறை துணைத் தலைவா் மூா்த்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் ஆகியோா் முன்னிலையிலும் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.

