தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
தேவா் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.

குடியரசு துணைத் தலைவா், தமிழக முதல்வா் இன்று பசும்பொன் வருகை

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழா
Published on

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் வியாழக்கிழமை (அக். 30) நடைபெறும் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

பசும்பொன்னில் விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா கடந்த 28-ஆம் தேதி தொடங்கியது.

பசும்பொன்னில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சா்கள் பங்கேற்கின்றனா். மேலும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், பாஜக, நாதக, சமுதாய அமைப்பினா், விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் தேவா் சிலைக்கு மரியாதை செலுத்தப்படவுள்ளது.

குடியரசு துணைத் தலைவா், தமிழக முதல்வா் வருகையையொட்டி, பசும்பொன்னில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com