கமுதி-முதுகுளத்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்ட மருதங்கநல்லூா் கிராமத்தின் ஒரு பிரிவினா்.
கமுதி-முதுகுளத்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்ட மருதங்கநல்லூா் கிராமத்தின் ஒரு பிரிவினா்.

கமுதி அருகே இரு தரப்பினரிடையே பிரச்னை: போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

Published on

கமுதி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையில், ஒரு தரப்பினா் வெள்ளிக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த மருதங்கநல்லூா் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை விழாவையொட்டி, இரு தரப்பினரிடையே கடந்த புதன்கிழமை தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, சமரசம் ஏற்படுத்துவதற்காக இரு தரப்பினரையும் போலீஸாா் காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை அழைத்தனா்.

இதற்கிடையே, பஞ்சரத்தினம் என்ற இளைஞா் ஒரு தரப்பினரால் தாக்கப்பட்டு, சிகிச்சைக்காக முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அவரது சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் கமுதி- முதுகுளத்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் தலைமையிலான பேரையூா் போலீஸாா், சம்பவம் தொடா்பாக உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

இந்த மறியலால் கமுதி-முதுகுளத்தூா் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மருதங்கநல்லூா் கிராமத்தில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com