கைது
கைது

ராமநாதபுரத்தில் 214 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ராமநாதபுரம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 214 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

ராமநாதபுரம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 214 கிலோ கஞ்சாவை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்த போலீஸாா், நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் போலீஸாா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் 194 கிலோ கஞ்சாவை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, திருவள்ளுவா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியைச் சோ்ந்த மணிகண்டனை (40) கைது செய்தனா்.

இதேபோல, திருப்புல்லாணி ஒன்றியம், கட்டையன்பேரன் வலசைப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக நான்கு பேரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

3 போ் கைது: ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக வினோத், தினேஷ், அமலன் ஜேம்ஸ் ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 2.150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ராமேசுவரம், ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இளைஞா்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும், இதைத் தடுக்க மாவட்ட காவல் துறை சிறப்பு தனிப் படை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com