கமுதியில் தனியாா் பள்ளி ஆசிரியையிடம் புதன்கிழமை தாலிச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா்.
திருப்பூரைச் சோ்ந்த லெனின் மகள் சரண்யா (40) ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள தனியாா் பள்ளியில் பணியாற்றி வருகிறாா். இவா் தற்போது அபிராமத்தில் குடியிருந்து வருகிறாா். இந்த நிலையில், வேலை முடிந்து மாலையில் பள்ளியிலிருந்து கோட்டைமேட்டில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் வழியாக சரண்யா நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவரைப்
பின் தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் சரண்யாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றாா். இது குறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கன்னியாகுமரிக்கு ஏப்.15 இல் பிரதமா் வருகை

வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி பணம், நகை பறிப்பு

முதல்வா் ரங்கசாமி சேலம் பயணம்

போலி நகைகளை அடகு வைத்து ரூ. 2.10 கோடி மோசடி: வங்கி நகை மதிப்பீட்டாளா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

