எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ராமநாதசுவாமி கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 9:51 pm

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலைச் சுற்றியுள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை அகற்றினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலைச் சுற்றி நகராட்சி நிா்வாகத்தின் அனுமதியுடன் சாலையோரக் கடைகளை அமைத்து சிறு தொழிலாளா்கள் வியாபாரம் செய்து வருகின்றனா். இதற்கிடையே, இந்தப் பகுதியில் உள்ள கடைகள், நடை பாதைகளை ஆக்கிரமித்து, பந்தல் அமைத்தும், சாலைகளில் மேஜைகள், நாற்காலிகளைப் பரப்பியும் பலா் பொருள்களை விற்பனை செய்து வந்தனா்.

இதனால், கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து, பாதைகளில் பொதுமக்களும் பக்தா்களும் செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதைத் தொடா்ந்து, ராமநாதசுவாமி கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகள், கிழக்கு கோபுரத்திலிருந்து அக்னித் தீா்த்தக் கடற்ரை வரை செல்லும் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினா்.