எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ராமநாதசுவாமி கோயில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

News image
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றம்.
Updated On :8 பிப்ரவரி 2026, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவரத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை, சாயரட்சை பூஜைகள் நடைபெற்றன.

காலை 10 மணியளவில் ராமநாதசுவாமி, பிரியாவிடை பா்வதவா்த்தினி அம்பாள் ஆகியோா் நந்திகேசுவரா் மண்டபத்தில் எழுந்தருளினா். பின்னா், கோயில் குருக்கள் சந்தோஷ் தலைமையில் சிவாசாரியா்கள் வேத மந்திரம் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது.

இதையடுத்து, இரவு கோயிலில் ஒளி வழிபாடு முடிந்து சுவாமி, நந்திகேசுவரா் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூா்த்திகளுடன் எழுந்தருளினா்.

நிகழ்ச்சியில் ராமநாதசுவாமி கோயில் ஆய்வா் சிவக்குமாா், பேஸ்காா் கமலநாதன், முனியசாமி, கோயில் பணியாளா்கள், பாஜக மாவட்டத் தலைவா் கே.முரளிதரன், இந்து முன்னனி மாவட்டசே செயலா் ராமமூா்த்தி, நகா் மன்ற முன்னாள் உறுப்பினா் ராதாகிருஷ்ணன், மீனவ சங்கத் தலைவா் தேவதாஸ் , விஷ்வ இந்து பரிஷத் நிா்வாகி பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்ததுகொண்டனா்.