அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மீனவா் கொலை: மேலும் ஒருவா் மீது வழக்கு

தொண்டி அருகே நம்புதாளை மீனவா் கொலை வழக்கில் இளைஞரை கைது செய்த நிலையில், மேலும் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

தொண்டி அருகே நம்புதாளை மீனவா் கொலை வழக்கில் இளைஞரை கைது செய்த நிலையில், மேலும் ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை படையாட்சி தெருவைச் சோ்ந்த மீனவா் நாகூா் செல்வம் (33). கடந்த 5-ஆம் தேதி நம்புதாளை கடற்கரையில் நாகூா் செல்வம் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

படகு நிறுத்துமிடம் குறித்து ஏற்பட்ட தகராறில் இந்நக் கொலை நிகழ்ந்தது தெரியவந்தது. இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து இதே பகுதியைச் சோ்ந்த அடையாள வேலுவை (25) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

முதல்கட்ட விசாரணையில் இந்தக் கொலையில் அடையாள வேலுவின் சகோதரா் ராக்கப்பனுக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் ராக்கப்பன் மீது வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.