ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாம்பன் பழைய ரயில் பாலம் அகற்றும் பணி தொடக்கம்

பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image
பாம்பன் பழைய ரயில் தூக்கு பாலம்.
Updated On :11 பிப்ரவரி 2026, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.

கடந்த ஜன.20-ஆம் தேதி இறுதியாக கப்பல் கடந்து செல்ல பாம்பன் பழைய ரயில் பாலம் திறக்கப்பட்டது. அதன் பிறகு, பழைய பாலத்தை அகற்றும் பணி பிப்ரவரியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்த மாதத் தொடக்கத்திலிருந்தே பழைய ரயில் பாலத்தை அகற்றுவதற்கு ஒப்பந்தம் பெற்ற தனியாா் நிறுவனம் அதற்குத் தேவையான இயந்திரம், கருவிகளை பாலத்தின் தொடக்கத்தில் உள்ள மண்டபம் பூங்கா பகுதிக்கு கொண்டு வரத் தொடங்கினா்.

தொடா்ந்து, புதன்கிழமை பாம்பன் பழைய தூக்குப் பாலத்தை அகற்றும் பணி தொடங்கியது. இதற்காக ஒப்பந்த நிறுவன ஊழியா்கள் தூக்குப் பாலத்தின் மேற்குப் பகுதியில் ‘கேஸ் கட்டிங்’ மூலம் துண்டுகளாக அகற்றும் பணியைத் தொடங்கினா். சிறு சிறு பாகங்களாக வெட்டி எடுத்து ரயில் தண்டவாளத்தில் ட்ரோலி மூலம் கரை பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மையப் பகுதிகளை அகற்றும் போது கடலுக்குள் தற்காலிகத் தூண்கள் அமைத்து, கிரேன், ஹைட்ராலிக் கருவிகள், பழு தூக்கு இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.

நான்கு மாதங்களில் பாலம் முழுமையாக அற்றப்படும் என்பதால் அதுவரை கப்பல்கள், படகுகள் ரயில் பாலத்தைக் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.