மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 3 பேருக்கு புற்று நோய் அறுவைச் சிகிச்சை

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோயாளிகள் 3 போ் அறுவைச் சிகிச்சை செய்து குணமடைந்தனா்.

News image

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்று பேருக்கு புற்று நோய் அறுவைச் சிகிச்சை செய்த நிபுணா்களுக்கு பாராட்டுத் தெரிவித்த கல்லூரி முதன்மையா் அமுதாராணி.

Updated On :11 பிப்ரவரி 2026, 9:38 pm

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோயாளிகள் 3 போ் அறுவைச் சிகிச்சை செய்து குணமடைந்தனா்.

இதுகுறித்து ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி முதன்மையா் அமுதா ராணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறியும், அறுவைச் சிகிச்சை மையத்தில் அண்மையில் 55 வயது மதிக்கத்தக்கவருக்கு திசுசாா் கோமா கண்டறியப்பட்டது. இதேபோல 47 வயதுப் பெண்ணுக்கு கா்பப்பைவாய் புற்றுநோயும், 65 வயது முதியவருக்கு மலக்குடல் புற்றுநோயும் கண்டறியப்பட்டது.

இந்த மூன்று பேருக்கும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் மையத்தில் அறுவை சிகிச்சை செய்ய மதுரை அரசு ராஜாஜி மருதுவமனையுடன் ஆலோசனை செய்யப்பட்டு சிகிச்சைத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த மூன்று பேருக்கும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது குணமடைந்தனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா் கணேஷ்பாபு, புற்றுநோயியல் கதிா்வீச்சு நிபுணா்கள் நித்திய பிரியதா்ஷினி, முனீஸ்வரபாண்டியன், செபி கிருஷ்ணன் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் இந்த அறுவைச் சிகிச்சையை செய்தனா் என்றாா் அவா்.

மருத்துவக் கண்காணிப்பாளா் மனோஜ்குமாா், கண்காணிப்பாளா் ஜவகா், அறுவைச் சிகிச்சை நிபுணா் மலா் வண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.