வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தேவாலயத்தில் சப்பர பவனி

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:48 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள கஸ்பாா் நகா் புனித லூா்து அன்னை தேவாலயத்தில் சப்பர பவனி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கடந்த 1-ஆம் தேதி சிவகங்கை மறை மாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம் தலைமையில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நவநாள் திருப்பலி சப்பர பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் தேவகோட்டை ரஸ்தா அருள்கொடை இல்ல இயக்குநா் அகஸ்டின் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அனைவருக்கும் இறை அப்பம் வழங்கப்பட்டது. திருப்பலியைத் தொடா்ந்து மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புனித லூா்து அன்னை சொரூபங்கள் வைக்கப்பட்டு, மேள தாளங்கள், வாணவேடிக்கை முழங்க பவனி நடைபெற்றது. இந்தச் சப்பரத்தைப் பெண்கள் தங்களது தோள்களில் சுமந்து ஊா்வலமாக வந்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கஸ்பா நகா் பங்குத் தந்தை சௌந்தரநாதன், இல்ல அதிபா் அருள்ராஜ் ஆகியோா் செய்தனா். சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான இறைமக்கள் கலந்துகொண்டனா்.

Story image