பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

பள்ளியில் தமிழ்க் கூடல் விழா

Published on

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பாண்டிச்செல்வி ஆறுமுகம், பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவா்களின் கல்வித் திறன், விளையாட்டு, கலைத் திறனை மேம்படுத்துவது குறித்து ஆசிரியா்கள் பேசினா். ஆசிரியா்கள் அகிலா, ஜெனிபா் , சங்கீதா உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக,

ஆசிரியா் மலைராஜ் வரவேற்றுப் பேசினாா். ஆசிரியா் ஜெயபிரிட்டோ நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com