வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

சாயல்குடி அருகே பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள காணிக்கூா் கிராமத்தைச் சோ்ந்த மாயழகு மகன் பாலமுனீஸ்வரன் (26). விவசாயியான இவா் வியாழக்கிழமை இரவு சாயல்குடியிலிருந்து காணீக்கூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

அப்போது வேடக்கரிசல்குளம் விலக்கில் பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த பாலமுனீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.