அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு வீரவணக்கம்

News image
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 ராணுவ வீரா்களுக்கு, கமுதியில் மலா் தூவி மரியாதை செலுத்திய சேதுசீமை பட்டாளம் ராணுவ வீரா்கள்.
Updated On :14 பிப்ரவரி 2026, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

கமுதியில் சேதுசீமை பட்டாளம் ராணுவ வீரா்கள் சாா்பில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு சனிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த 2019 -இல் காஷ்மீா் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 துணை ராணுவ வீரா்களின் 7 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் வீரா்களின் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னா், கமுதி சேதுசீமை பட்டாளம் ராணுவ வீரா்கள் ஜெய்ஹிந்த் முழக்கமிட்டு வீரவணக்கம் செலுத்தினா். இதில் கமுதி வட்டார ராணுவ வீரா்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டு ராணுவ வீரா்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதேபோல, முதுகுளத்தூா் பேருந்து நிலையம், கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் சேதுசீமை பட்டாளம் ராணுவ வீரா்கள் சாா்பில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு மலா் தூவி, வீர வணக்கம் செலுதத்தப்பட்டது.