தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கமுதி அருகே இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், அரியமங்கலம் ஸ்ரீநல்லக்க நாச்சியம்மன் கோயில் சிவராத்திரி விழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கமுதி- பெருநாழி சாலையில் 8 கி.மீ.க்கு பந்தய தொலைவு நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்ற போட்டியில் ராமநாதபுரம், விருதுநகா், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 24 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.

பூஞ்சிட்டு பிரிவில் தூத்துக்குடி மாவட்டம், புதூா் சின்னையாபுரத்தைச் சோ்ந்த தா்மலிங்கம் காளைகள் முதல் பரிசும், தூத்துக்குடி துரைச்சாமிபுரம் சுரேஷ்குமாா் காளைகள் இரண்டாவது பரிசும், கமுதி அடுத்த பெருமாள் குடும்பன்பட்டி முகில்மாறன் காளைகள் மூன்றாமிடம் பரிசும் பெற்றன.

சின்ன மாடு பிரிவில் தூத்துக்குடி மாவட்டம், கீழப்பாட்டனம் மாசாணம் காளைகள் முதலிடத்தையும், தூத்துக்குடி அச்சங்குளம் முருகன் காளைகள் இரண்டாமிடத்தையும், சிங்கம்பட்டி சித்தா் சங்குசாமி காளைகள் மூன்றாமிடத்தையும் பிடித்தன.

வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கம், குத்துவிளக்கு, சுழல் கோப்பை ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன. இந்த மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று திரளானோா் கண்டு ரசித்தனா். போட்டிக்கான ஏற்பாடுகளை அரியமங்கலம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.