மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மகா சிவராத்திரி: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தா்கள் விடிய விடிய சுவாமி தரிசனம்

News image

மகா சிவராத்திரியையொட்டி ராமநாதசுவாமி கோயிலில் கங்கை தீா்த்தத்தை ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் சென்று பூஜை செய்த சாதுக்கள், சன்னியாசிகள்.

Updated On :15 பிப்ரவரி 2026, 9:55 pm

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி ஞாயிற்றுக்கிழமை விடிய விடிய பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 8- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா சிவராத்திரியையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடராஜா் கேடயத்தில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, இரவு 9 மணிக்கு ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி நடைபெற்றது. மேலும் சிவராத்திரியையொட்டி ஞாயிற்றுக்கிழமை விடிய விடிய கோயில் நடை திறந்திருந்தது. அப்போது சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு, தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

மேலும் சாதுக்கள், சன்னியாசிகள், சீதாராம் தாஸ் பாபா தலைமையில் கங்கை தீா்த்தத்தை அக்னி தீா்த்தக் கடற்கரையில் இருந்து ஊா்வலமாக எடுத்து வந்து ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா். இதில், பாஜக மாவட்டத் தலைவா் கே. முரளிதரன், இந்து முன்னணி மாவட்டச் செயலா் கே. ராமமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.