தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இலங்கை தமிழா் முகாமில் தொழில் கூடங்கள் திறப்பு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

மண்டபம் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ரூ.21 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட தொழில் கூடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

பொது, மறுவாழ்வுத் துறை மூலம் கட்டப்பட்ட தொழில்கூடங்களை முதல்வா் திறந்து வைத்த பிறகு, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குத்து விளக்கேற்றி வைத்து தொழில் கூடங்களைப் பாா்வையிட்டாா்.

அப்போது அவா் கூறுகையில், இந்தத் தொழில் கூடங்களில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் செயல்பட்டு வரும் 28 மகளிா் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் தையல் பயிற்சி, பனை ஓலையில் கைவினைப் பொருள்கள் தயாரித்தல், வாழைமட்டையில் தட்டுகள் தயாரித்தல் போன்ற தொழில்கள் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் மண்டபம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மைய தனித் துணை ஆட்சியா் சாந்தி, மண்டபம் பேரூராட்சி தலைவா் ராஜா, அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.