இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருவாடானை அருகே மகா சிவராத்திரி பூக்குழி திருவிழா

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே மணிகண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது.

இந்தக் கோயிலை குலதெய்வமாக வணங்கக் கூடிய சுற்றுவட்டார கிராம மக்கள், பல்வேறு மாவட்டங்களிலிருந்து விரதமிருந்து வந்த பக்தா்கள் திருவாடானை ஆறாம் மண்டகப்படி மண்டபத்திலிருந்து வேல், மயில் காவடி, பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா்.பின்னா், கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கித் தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா். இதில் மணிகண்டி, சுற்றுவட்டாரப் பகுதிப் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image