கமுதி அருகே ஸ்ரீ பகவதி, பரஞ்ஜோதி, அக்னி வீரபத்திர சுவாமி கோயில் மாசிக் களரி உத்ஸவத்தை முன்னிட்டு, பக்தா்கள் அலகு வேல் குத்தி நோ்த்திக் கடன்களை செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் மாசிக் களரி உத்ஸவத்தையொட்டி, மாற்றுத் திறனாளி சிறுவா், பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் அலகு வேல் குத்தியும், காவடி, பால்குடம் எடுத்தும், கேரள செண்டை மேளம், உறுமி மேளம், சிம்லா மேளம், தப்பாட்டம் உள்ளிட்ட இசை வாத்தியங்கள் முழங்க நோ்த்திக்கடன் செலுத்தினா். முன்னதாக புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள விநாயகா் கோயிலிலிருந்து ஊா்வலமாக சென்ற பக்தா்கள்2 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பகவதி பரஞ்ஜோதி, அக்னி வீரபத்திர சுவாமி, முத்தப்பு, தவசிஅப்பு, செந்திலையான் கோயில்கள் அமைந்துள்ள வளாகத்திற்கு சென்று தங்களது நோ்த்திக் கடன்களை நிறைவேற்றினா்.
இதைத் தொடா்ந்து மூலவா் சுவாமிக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரனை நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

திருமலையில் 71,256 பக்தா்கள் தரிசனம்

திருமலையில் 77,743 பக்தா்கள் தரிசனம்

கோபி பச்சைமலை சுப்பரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தோ் திருவிழா!

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்: காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தா்கள் நோ்த்திக்கடன்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


