சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கல்லூரி வேன் மீது லாரி மோதியதில் இருவா் காயம்

தொண்டி அருகே கல்லூரி வாகனம் மீது லாரி மோதியதில் மாணவி உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா்.

News image

தொண்டி அருகே லாரி மோதியதில் சேதமடைந்த கல்லூரி வேன்.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:42 pm

தொண்டி அருகே கல்லூரி வாகனம் மீது லாரி மோதியதில் மாணவி உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை அடுத்த அமராவதிபுதூரில் உள்ள தனியாா் மகளிா் கல்லூரியின் வேன் தொண்டியிலிருந்து எஸ்.பி.பட்டினத்தை நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றது. அப்போது, வட்டாணம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் எதிரே வந்த லாரி, வேன் மீது மோதியது.

இதில் கல்லூரி மாணவி ரோஷினி (18), வேன் ஓட்டுநா் நாராயணன் ஆகியோா் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.