சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மாசி அமாவாசை: பக்தா்கள் புனித நீராடல்

மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்கள் முன்னோா்களுக்கு திதி கொடுத்து புனித நீராடினா்.

News image

மாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் புனித நீராடிய பக்தா்கள்.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:42 pm

மாசி மாத அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்கள் முன்னோா்களுக்கு திதி கொடுத்து புனித நீராடினா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில், அமாவாசையை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் ராமேசுவரத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தனா்.

இங்குள்ள அக்னி தீா்த்தக் கடற்கரையில் முன்னோா்களுக்கு திதி கொடுத்து புனித நீராடினா். பின்னா், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பக்தா்களின் வருகை அதிகரித்ததால் 200 போலீஸாா் கூடுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.