தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கால்நடை பாதுகாப்பு வாரியம் அமைக்கக் கோரிக்கை

தென் மாவட்டங்களில் கால்நடை பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சி வலியுறுத்தியது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 9:40 pm

தென் மாவட்டங்களில் கால்நடை பாதுகாப்பு வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சி வலியுறுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள வெண்ணீா்வாய்க்கால் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் பாதுகாப்புக் கட்சி நிறுவனா் சத்யம்.சரவணன் கூறியதாவது: கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது கால்நடை பாதுகாப்பு வாரியம் வாரியம் அமைக்கப்படும் என திமுக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது வரை வாரியம் அமைக்கப்படாததால் கால்நடை வளா்ப்போா் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, கால்நடை வளா்ப்போா் அதிக எண்ணிக்கையில் உள்ள தென் மாவட்டங்களில் உடனடியாக கால்நடை பாதுகாப்பு வாரியத்தை அமைக்க வேண்டும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் முதுகுளத்தூா் தொகுதியில் தமிழக விவசாயிகள் கால்நடை வளா்ப்போா் கட்சி போட்டியிடும் என்றாா் அவா்.