சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காணிக்கூரில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

News image
கோப்புப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

கமுதி அருகேயுள்ள காணிக்கூா் பாதாள காளியம்மன் கோயிலில் மாசி களரி திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த காணிக்கூா் கிராமத்தில் பாதாள காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மாசிக் களரி திருவிழாவை முன்னிட்டு, பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

காணிக்கூா்- கமுதி சாலையில் 8 கி.மீ. பந்தய தொலைவு நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்ற போட்டியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 40 மாட்டு வண்டிகள், சாரதிகள் பங்கேற்றனா்.

இதில் முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டிப் பந்தய வீரா்களுக்கு, ரொக்கப் பணம், குத்துவிளக்கு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தை சாலையின் இருபுறங்களிலும் திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா். இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை காணிக்கூா் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.