தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

காரங்காடு தூய செங்கோல் மாதா தேவாலயத்தில் சிலுவைப் பாதை வழிபாடு

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 8:04 pm

திருவாடானை அருகே காரங்காட்டில் அமைந்துள்ள தூய செங்கோல் மாதா தேவாலயத்தில் தவ நடை திருப்பாதை யாத்திரை வழிபாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த தூய செங்கோல் மாதா தேவாலயம் அமைந்துள்ளது.

இதில், தவக்காலத்தையொட்டி சனிக்கிழமை இரவு நடைபெற்ற தவ நடை திருப்பாதை யாத்திரை வழிபாடுக்கு பங்குத்தந்தை ரெமிஜியஸ் தலைமை வகித்தாா். இதில் உலக அமைதிக்காகவும், பாவங்களுக்கு பரிகாரமாகவும், மக்கள் மத்தியில் நல்ல உறவும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காகவும் இதற்கு தடையாக இருக்கும் அனைத்து அநீதி செயல்பாடுகள் நீங்கிட இந்த தவ நடை திருப்பாதை யாத்திரை நடைபெற்றது.

இந்த யாத்திரை தேவாலயத்திலிருந்து தொடங்கி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கடற்கரையில் ஆற்றங்கரையின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள தூய அமலோற்பவ மாதா கெபியில் நிறைவடைந்தது. அங்கு நற்கருணை ஆராதனையும், சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றன. இதில் திரளான இறை மக்கள் கலந்து கொண்டனா்.