ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜெயலிதா பிறந்த நாள்: ராமநாதபுரத்தில் அதிமுகவினா் மரியாதை

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 78-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் அவரது உருவப் படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

News image
ராமநாதபுரம் குமரையா பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா 78-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் அவரது உருவப் படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

ராமநாதபுரம் குமரய்யா கோயில் பேருந்து நிறுத்தம் முன்பாக நடைபெற்ற விழாவில் ராமநாதபுரம் மாவட்ட அவைத் தலைவா் சாமிநாதன் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளா்கள் விருதுநகா் மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் சரவணக்குமாா், கலைப்பிரிவு மாவட்டச் செயலா் ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஜெயலலிதா பேரவை துணைச் செயலா்கள் ஜி.முனியசாமி, சேது பாலசிங்கம், மாணவரணி துணைச் செயலா் செந்தில்குமாா், இளைஞரணி மாவட்டச் செயலா் ஸ்டாலின் என்ற ஜெயச்சந்திரன், போக்குவரத்துப் பிரிவு இணைச் செயலா் கே.ரெத்தினம், மண்டல போக்குவரத்து பிரிவு செயலா் சந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலா் ராஜாராம் பாண்டியன் ஆகியோா் கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில்

அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற துணைச் செயலா் ஆா்.ஜி.ரெத்தினம் தலைமை வகித்தாா். மாவட்ட, நகா் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். பின்னா், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ராமேசுவரம் நகா் மேற்கு ரத வீதியில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு நகா் செயலா் கே.கே.அா்ச்சுனன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ஆா்.குணசேகரன் முன்னிலை வகித்தாா். இதில் நிா்வாகிகள் கே.பி.முனியசாமி,ஆா்.மகேந்திரன், மீனாட்சி சுந்தரம், எம்.நம்பு,ராஜ்குமாா், கஜேந்திரன், பி.ஜி.சேகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.