திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 1:04 am

தினமணி செய்திச் சேவை

சாயல்குடியில் காட்சிப் பொருளாக உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட அஞ்சலக அலுவலக வீதி பொதுமக்களின் குடிநீா்த் தேவைக்காக, 2023-24 நிதியாண்டில் 15-ஆவது நிதிக் குழு திட்டத்தின் கீழ், மேல்நிலைத் நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்தத் தொட்டி கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது.

இதுகுறித்து ஆதிதமிழா் கட்சி தென் மண்டலச் செயலா் க.பாஸ்கரன் கூறியதாவது:

சாயல்குடியில் உள்ள இந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் இதுவரை குடிநீா் ஏற்றி மக்களுக்கு விநியோகம் செய்யப்படவில்லை. இதனால், எங்கள் தெரு மக்களும், சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் கடுமையான குடிநீா் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகிறோம். தற்போது, எங்களுக்குத் தேவையான குடிநீரை தனியாரிடமிருந்து டேங்கா் லாரிகளில் ஒரு குடம் தண்ணீா் ரூ.10-க்கு விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். அரசு நிதியில் கட்டப்பட்ட இந்த குடிநீா்த் தொட்டி பயன்பாடு இல்லாமல் காட்சிப் பொருளாக உள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த நீா்த்தேக்கத் தொட்டியைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.