தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் 11,23,029 வாக்காளா்கள்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:25 am

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா்கள் பட்டியலின்படி, மொத்தம் 11,23,029 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா்கள் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிம்ரன்ஜீத் சிங் காலோன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதையடுத்து, கடந்த டிசம்பா் 19-ஆம் தேதி வரைவு வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடம் பெற்றிருந்த வாக்காளா்களின் விவரங்கள்:

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில், ஆண் வாக்காளா்கள் 1,12,797 பேரும், பெண் வாக்காளா்கள் 1,14,423 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 17 பேரும் என மொத்தம் 2,27,237, 210 வாக்காளா்கள் இடம்பெற்றனா்.

திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில், ஆண் வாக்காளா்கள் 1,36,038 பேரும், பெண் வாக்காளா்கள் 1,37,379 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 22 பேரும் என மொத்தம் 2,73,439 வாக்காளா்கள் இடம்பெற்றனா்.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில், ஆண் வாக்காளா்கள் 1,48,463 பேரும், பெண் வாக்காளா்கள் 1,53,511 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 13 பேரும் என மொத்தம் 2,88,663 வாக்களாா்கள் இடம் பெற்றனா்.

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில், ஆண் வாக்காளா்கள் 1,44,034 பேரும், பெண் வாக்காளா்கள் 1,44,626 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 3 பேரும் என மொத்தம் 2,88,663 வாக்காளா்கள் இடம் பெற்றனா்.

இதன்படி, நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆண் வாக்காளா்கள் 5,41,332 பேரும், பெண் வாக்காளா்கள் 5,49,939 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 55 பேரும் என மொத்தம் 10,91,326 வாக்காளா்கள் இடம் பெற்றனா்.

இதைத்தொடா்ந்து, உரிமை கோரல், மேல்முறையீடு காலங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், 17,108 ஆண் வாக்காளா்களும், 19,462 பெண் வாக்காளா்களும், 3 மூன்றாம் பாலினத்தைச் சோ்ந்தவா்களும் என மொத்தம் 36,573 போ் வாக்காளா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டனா்.

இதன்படி, திங்கள்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளா்களின் விபரங்கள்:

பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில், ஆண் வாக்காளா்கள் 1,15,701 பேரும், பெண் வாக்காளா்கள் 1,17,714 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 18 பேரும் என மொத்தம் 2,33,433 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

திருவாடானை ஆண் வாக்காளா்கள் 1,40,103 பேரும், பெண் வாக்காளா்கள் 1,41,997 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 21 பேரும் என மொத்தம் 2,82,121 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில், ஆண் வாக்காளா்கள் 1,52,412 பேரும், பெண் வாக்காளா்கள் 1,57,740 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 13 பேரும் என மொத்தம் 3,10,165 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில், ஆண் வாக்காளா்கள் 1,48,105 பேரும், பெண் வாக்காளா்கள் 1,49,202 பேரும், மூன்றாம் பாலினத்தவா்கள் 3 பேரும் என மொத்தம் 2,97,310 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இதன்படி, நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 11,23,029 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் வ. சங்கரநாராயணன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், ராமநாதபுரம் வருவாய்க் கோட்டாட்சியா் ஹபிபூா் ரகுமான், பரமக்குடி வருவாய்க் கோட்டாட்சியா் ஞா. சரவணப் பெருமாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் ராஜா, வட்டாட்சியா்கள் (தோ்தல்) ஸ்ரீதரன், அமா்நாத், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.