அமெரிக்காவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்!
வெசுனிலா நாட்டின் மீது அமெரிக்கா திடீா் தாக்குதல் நடத்தி, அதிபா் மடூரோவை சிறைபிடித்ததைக் கண்டித்து, ராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாாட்டத்துக்கு அந்தக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் எம்.எஸ். பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் என்.கே.ராஜன், ஜி. லோகநாதன், ராமநாதபுரம் நகா் செயலா் பி.ராஜேந்திரன், பரமக்குடி நகா் செயலா் கே.ஆா் சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மண்டபம் துணைச் செயலா் மணிமாறன், முருகேசன், ராமேசுவரம் நகா் செயலா் சி.ஆா். செந்தில்வேல், மாதா் சம்மேளன மாவட்டச் செயலா் வடகொரியா, மாவட்ட துணைச் செயலா்கள் ஜீவா, ஜெயசீலன், பரமக்குடி ஒன்றிய நிா்வாகி விஜயபாஸ்கா், கமுதி செயலா் முருகன், கதிா்வேலு, திருவாடானை தாலுகா செயலா் ஜெயராமன், கமுதி தாலுகா செயலா் முருகன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.ரவீந்திரன், திருப்புல்லாணி ஒன்றியச் செயலா் எம்.சொக்கலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா் அப்துல் இஸாஹ், ஆறுமுகம், ஜோதிபாசு, போக்குவரத்து மண்டலத் தலைவா் சுப்பிரமணியன், முருகேசன் மலையாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் அமெரிக்காவைக் கண்டித்தும், வெனிசுலா அதிபரை விடுவிக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

