திருவாடானையில் பூட்டப்பட்டிருந்த நில அளவை அலுவலகம்
ராமநாதபுரம்
திருவாடானை நில அளவை அலுவலகம் மூடல்
திருவாடானையில் முன்னறிவிப்பின்றி நில அளவை அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டியதால் பொதுமக்கள் அவதி
திருவாடானையில் முன்னறிவிப்பின்றி நில அளவை அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டியதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியா் அலுவலக வளாகத்துக்குள் நில அளவைப் பிரிவு அலுவலகம் தனியாகச் செயல்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை முதலே இந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. அலுவலகப் பணி நேரத்தில், எந்தவித முன்னறிவிப்புமின்றி பல மணி நேரம் அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வந்த பொதுமக்கள் வந்து ஏமாற்றத்துடன் சென்றனா்.
இது குறித்து வட்டாட்சியா் ஆண்டி கூறுகையில், அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

