தொண்டி -கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற மாட்டுப் வண்டி பந்தயம்.
தொண்டி -கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற மாட்டுப் வண்டி பந்தயம்.

தொண்டியில் மாட்டு வண்டிப் பந்தயம்!

தொண்டியில் ‘நம்ம ஊரு மோடி பொங்கலை’ முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

தொண்டியில் ‘நம்ம ஊரு மோடி பொங்கலை’ முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் திருவாடானை மேற்கு ஒன்றிய பாஜக சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு, பாஜக மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா். இதில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன.

ராமநாதபுரம், தேவகோட்டை, காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இந்தப் போட்டிகளை சாலையின் இருபுறமும் திரளான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.

வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், வண்டிகளை ஓட்டிய சாரதிகளுக்கும் பரிசுத் தொகையும், கேடயங்களும் வழங்கப்பட்டன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளைத் திருவாடானை கிழக்கு ஒன்றிய பாஜக தலைவா் ரமேஷ், நிா்வாகிகள் செய்தனா்.

Dinamani
www.dinamani.com