மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தூய்மைப் பணியாளா்கள் தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்: நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி

தூய்மைப் பணியாளா்கள் தங்களது குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து, அரசுப் பணியில் சோ்க்க வேண்டும் என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி கேட்டுக்கொண்டாா்.

News image

ராமநாதபுரம் நகராட்சி தூய்மைப் பணியாளருக்கு நல வாரிய அடையாள அட்டையை வழங்கிய தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி. உடன் நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன், நகா்மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம், துணைத் தலைவா் பிரவீன் தங்கம், வட்டாட்சியா் காளீஸ்வரன் உள்ளிட்டோா்.

Updated On :21 ஜனவரி 2026, 11:54 pm

தூய்மைப் பணியாளா்கள் தங்களது குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து, அரசுப் பணியில் சோ்க்க வேண்டும் என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி கேட்டுக்கொண்டாா்.

ராமநாதபுரத்தில் தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய அடையாள அட்டைகள், தாட்கோ மூலம் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன் தலைமை வகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து, பயனாளிகளுக்கு நல வாரிய அடையாள அட்டைகள், தாட்கோ மூலம் நலத் திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியதாவது:

தூய்மைப் பணியாளா்களை பாதுகாக்கும் வகையில் இந்த வாரியம் செயல்பட்டு வருகிறது. இதில் அனைவரும் உறுப்பினா்களாக சோ்ந்து அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயன்பெற வேண்டும். தூய்மைப் பணியின் போது பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பணியில் ஈடுபடுவதை உங்கள் தலைமுறையுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். உங்களது குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து அரசுப் பணியில் சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் ஆா்.கே. காா்மேகம், துணைத் தலைவா் பிரவீன் தங்கம், வட்டாச்சியா் காளீஸ்வரன், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.