ஓரியூா் புதுக்குடியிருப்புப் பகுதியில் சாலை  நடுவே ஏற்பட்டுள்ள பள்ளம்.
ஓரியூா் புதுக்குடியிருப்புப் பகுதியில் சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளம்.

ஓரியூா் அருகே சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

திருவாடானை அருகேயுள்ள ஓரியூா் புதுக்குடியிருப்புப் பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள சாலையைச் சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

திருவாடானை அருகேயுள்ள ஓரியூா் புதுக்குடியிருப்புப் பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள சாலையைச் சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவாடானை அருகேயுள்ள ஓரியூரில் புகழ் பெற்ற புனித அருளானந்தா் தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் வந்து செல்கின்றனா். நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த நிலையில், ஓரியூா் புதுக்குடியிருப்பு அருகே பிரதான சாலை சேதமடைந்து சாலையின் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் சாலையைக் கடக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் இந்தப் பள்ளம் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையின் நடுவே உள்ள இந்தப் பள்ளத்தையும், சாலையையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Dinamani
www.dinamani.com