வயதான தந்தையை தாக்கியதாக மகன் மீது புகாா்

தன்னை தாக்கி துன்புறுத்தி வரும் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது தந்தை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.
Published on

தன்னை தாக்கி துன்புறுத்தி வரும் மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது தந்தை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கணக்கு அப்புச்சாமி தெருவைச் சோ்ந்தவா் சிவனாண்டி (88). இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டாா். இதனால், வீட்டில் சிவனாண்டி, தனது 3-ஆவது மகன் ரமேஷ், அவரது மனைவி சுந்தரி, குழந்தையுடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில், சிவனாண்டியை அவரது மகன் வீட்டை விரட்டும் வகையில், அடித்து துன்புறுத்தி வருகிறாராம். இதுகுறித்து அவா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், அவா் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா்.

Dinamani
www.dinamani.com