மண்டபம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணி ஆட்சியா் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி துறை சாா்பில் ரூ. 56.48 லட்சத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் குயவன்குடி ஊராட்சியில் ரூ.16.45 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம், சாத்தான்குளம் ஊராட்சியில் நடுநிலைப் பள்ளியில் ரூ.31 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் ரூ.5.93 லட்சத்தில் சுகாதாரம் வளாகம், பட்டணம்காத்தான் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், ரூ.3.10 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் வீடு உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தாா். மேலும், இந்தப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின் போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயமுருகன், இளங்கோ, கோட்டை, உதவிப் பொறியாளா்கள் கோகுல், ராமசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

