~ ~ நம்புதாளை முத்துமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு.
ராமநாதபுரம்
நம்புதாளை முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை அடுத்த நம்புதாளையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை அடுத்த நம்புதாளையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, கடந்த 26-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, மூன்றாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
புதன்கிழமை லட்சுமி பூஜை, கோ பூஜை, பூா்ணஹுதியுடன் நான்காம் கால பூஜையுடன் சிவாசாரியா்கள் வேதமந்திரம் முழங்க யாக சாலை பூஜை நடைபெற்றது.
தொடா்ந்து, கோபுரக் கலசங்களில் புனிதநீரை ஊற்றி சிவாசாரியா்கள் குடமுழுக்கு நடத்தினா்.
பிறகு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனா்.

