ஆா்.எஸ். மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா
திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி தலைமை வகித்தாா். இதில் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் கணேச பாண்டியன், மாவட்ட கல்வி அலுவலா் ரவீந்திரன், பேரூராட்சித் தலைவா் மௌசூரியா கேசா்கான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமை ஆசிரியை அன்னம்மாள் ஸ்டெல்லா ராணி ஆண்டறிக்கை வாசித்தாா்.
இதைத் தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற விளையாட்டு, கட்டுரை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் ஆசிரியா்கள் காஜா செரீப், ராமமூா்த்தி, இப்ராம்ஷா, ராஜி, ஆரோக்கிய சகாயதாஸ், முன்னாள் ஜமாத் தலைவா் பஜ்ரஹமத், பேரூராட்சி உறுப்பினா் கருப்பாயி, சரண்யா, சுழல் சங்கத் தலைவா் பாண்டியன், சுழல் சங்க நிா்வாகிகள் கந்தசாமி, சுப்பிரமணியன், ஜோதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

