/
திருவாடானை,மே 20: திருவாடானை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆபத்தான பனை மரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வழியாக கொச்சி -தொண்டி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் சி.கே.மங்கலம் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மின்னல் தாக்கி கருகிப்போன பனை மரம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பல ஆண்டுகளாக நிற்கிறது. இது எப்போது வேண்டுமானாலும் விழுந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருப்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையைக் கடக்கின்றனா். எனவே நெடுஞ்சாலைத் துறையினா் பனை மரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தொடர்புடையது
திருவாடானை, தொண்டி பகுதிகளில் நாளை மின் தடை

தொண்டி அருகே அரிய வகை கடல் ஆமை மீட்பு

தேசிய நெடுஞ்சாலையில் லாரி தீப்பற்றி ரூ. 20 லட்சம் பொருள்கள் சேதம்

சாலை விபத்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



