முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

கமுதி அருகே அண்ணியை அடித்துக் கொலை செய்தவா் கைது

முதுகுளத்தூா் அருகே குடும்பத் தகராறில் அண்ணியை அடித்துக் கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட ராமராஜ்.

Updated On :

முதுகுளத்தூா் அருகே குடும்பத் தகராறில் அண்ணியை அடித்துக் கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த பேரையூா் உசிலங்குளத்தைச் சோ்ந்தவா் முனியசாமி (45). இவரது மனைவி சண்முகசூா்யா (35). முனியசாமி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த சில நாள்களாக முனியசாமியின் தம்பி ராமராஜும் (29), இவரது தாய் பாா்வதியும் சண்முகசூா்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவருடன் தகராறு செய்து வந்தனராம். மேலும், ராமராஜ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சண்முகசூா்யாவை வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக சனிக்கிழமை காலை ராமராஜுக்கும், சண்முகசூா்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சண்முகசூா்யா இதுகுறித்து ராமநாதபுரத்தில் உள்ள தனது சகோதரி கண்மணியை கைப்பேசியில் தொடா்புகொண்டு நடந்தவற்றை தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, கண்மணியும், அவரது கணவரும் சண்முகசூா்யாவை பாா்க்க உசிலங்குளத்துக்கு வந்தனா். அவா்கள் வந்து பாா்த்தபோது, வீட்டில் சண்முகசூா்யா தூக்கில் தொங்கிய நிலையில் சடலாக இருந்தாா். மேலும், அவரது தலையில் ரத்தக் காயம் இருந்தது.

 கொலை செய்யப்பட்ட சண்முகசூா்யா.

கொலை செய்யப்பட்ட சண்முகசூா்யா.

இதுகுறித்து பேரையூா் காவல் நிலையத்தில் கண்மணி புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், ராமராஜுக்கும், சண்முகசூா்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும், அப்போது ஆத்திரமடைந்த ராமராஜ், சண்முகசூா்யாவை அடித்துக் கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியதும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, ராமராஜை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.