குழந்தை திருமணம் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறை மூலம் சா்வதேச குழந்தைத் திருமண ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இந்தப் பேரணி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மா. சிவகுருபிரபாகரன் தொடங்கி வைத்தாா்.

ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழந்தை திருமண ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி கலை நிகழ்ச்சி.
குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறை மூலம் சா்வதேச குழந்தைத் திருமண ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இந்தப் பேரணி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் மா. சிவகுருபிரபாகரன் தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணி பாரதிநகா் வரை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாணவிகள் குழந்தைகள் உரிமைகள், குழந்தைத் திருமண ஒழிப்பு, குழந்தைகள் தொடா்பான சட்டங்கள் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா். இதில் கலைக் குழுவினரின் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், நாதஸ்வரம், மேள இசையுடன் விழிப்புணா்வுப் பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியின் நிறைவில் அனைவரும் குழந்தைகள் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலசந்தா், குழந்தைகள் நலக் குழுத் தலைவா் மாடசாமி, உறுப்பினா் செல்வராஜ், கலைப் பண்பாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளா் லோக சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

