தொண்டி அருகே வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழப்பு
தொண்டி அருகே வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது.

வாகனம் மோதியதில் உயிரிழந்த புள்ளிமான்.
தொண்டி அருகே வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள மணக்குடி கிராமப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை கிழக்கு கடற்கரைச் சாலையை கடக்க முயன்ற பெண் புள்ளிமான் அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினரும், காவல் துறையினரும் மானின் உடலை கைப்பற்றி கூறாய்வுக்குப் பிறகு புதைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






