ராமேசுவரம், அக். 18: தொடா் விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் ராமேசுவரத்துக்கு வந்திருந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு தொடா் விடுமுறையையொட்டி சனிக்கிழமை முதல் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்தனா். மேலும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடினா். இதன் பிறகு, கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடி ராமநாத சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கோதண்டராமா் கோயில், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பாலம் உள்ளிட்ட இடங்களை பாா்த்தனா். அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, தொடா் விடுமுறையாக இருந்தால் கூடுதல் போலீஸாரை போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

