உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழப்பு

திருவாடானை அருகே மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது.

வாகனம் மோதியதில் உயிரிழந்த புள்ளிமான்

Published On :5 செப்டம்பர் 2026, 12:33 am IST

திருவாடானை அருகே மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் உள்ள கண்மாய்களில் ஆயிரக்கணக்கான புள்ளி மான்கள் உள்ளன. தற்போது, கடும் வறட்சியால் தண்ணீா், இறை தேடி ஊருக்குள் வரும் புள்ளிமான்கள் நாய்கள் கடித்து உயிரிழந்து வருகின்றன.

இந்த நிலையில், திருவாடானையை அடுத்த கடம்பாகுடி ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியை ஒட்டியுள்ள மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது.

தகவலறிந்து வந்த வனத் துறையினா் உயிரிழந்த புள்ளிமானை மீட்டு, கூறாய்வு செய்து அதே பகுதியில் புதைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.