மகாபாரதம் தொடர் சொற்பொழிவு
By காரைக்குடி, | Published On : 12th May 2014 12:19 AM | Last Updated : 12th May 2014 12:19 AM | அ+அ அ- |

காரைக்குடி செஞ்சை அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி பெருமாள் கோயிலில் முதலாம் சாமத்தில் மழை வேண்டி மகாபாரதம் விராட பருவம் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கவிஞர் அரு. சோமசுந்தரன் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: வில்லி பாரதம் பத்துப் பருவங்கள் 4337 பாடல்கள். அவற்றில் விராட பருவம் 4ஆம் பருவம் 330 பாடல்கள்.
பகவான் கிருஷ்ணரைத் துதித்து முதல் பாடல் தொடங்குகிறது. 5 சருக்கங்கள் மகாபாரதத்தில் நிகழும் காட்சிகள் அனைத்தும் விராட பருவத்தில் நிகழும். ஆகவே இதனை மினி பாரதம் அல்லது பிள்ளை பாரதம் என்பர்.
மகாபாரதத்தில் துரியோதனாதியர் 100 பேர். தீயவர்கள் விராட பருவத்தில் கீசகன் மற்றும் அவன் தம்பியர் 104 பேர் தீயவர்கள்.
மகாபாரதத்தில் திரௌபதியை காந்தாரி துரியோதனனிடம் அனுப்புகிறாள். விராட பருவத்தில் மகாராணி சுதேஷ்னை திரௌபதியை கீசகனிடம் அனுப்புகிறாள். மகாபாரதத்தில் 18 நாள் போர். இதில் ஏராளமான மழைக்குறிப்புக்கள் உள்ளன. எனவே விராட பருவம் படித்தால் மழை பொழியும் என்றார்.
முன்னதாக கோயில் நிர்வாகி மெய்யப்பன் தொடக்க உரையாற்றினார். முருகப்பன் அறிமுக உரையாற்றினார்.
கோயில் அறங்காவலர் லெட்சுமணன் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் முக்கியப் பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.