மானாமதுரையில் செவ்வாய்கிழமை மதிமுக சார்பில் கொடியேற்று விழா கூட்டம் நடைபெற்றது.
மானாமதுரை நகரில் அனைத்து வார்டுகளிலும் மதிமுக மாவட்டச் செயலாளர் புலவர் செவந்தியப்பன் கட்சிக் கொடிகளை ஏற்றி வைத்தார். அதன்பின் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த கூட்டத்தில் அவர் சிறப்புரையாற்றினார். இக் கூட்டத்தில் மதிமுக நகரச் செயலாளர் கண்ணன் மாநில நிர்வாகி கார்கண்ணன், மற்றும் மானாமதுரை நிர்வாகி கா.அசோக், திருப்புவனம் ஒன்றிய நிர்வாகி சேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.