காரைக்குடிக்கு வரும், புறப்படும்   ரயில்கள் நேரம் மாற்றம்

காரைக்குடி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும்  ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
Updated on
1 min read

காரைக்குடி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும்  ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
    சென்னை எழுப்பூரிலிருந்து வாரந்தோறும் புதன்கிழமைகளில் புறப்படும் செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில் அதிகாலை காரைக்குடி ரயில்நிலையத்திற்கு புதிய நேரப்படி அதிகாலை 3.40 மணிக்கு வரும் (பழைய நேரம் 3.55). இந்த ரயில் மறுமார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து சென்னைக்கு இரவு 9.15 மணிக்கு புறப்படும் (பழைய நேரம் 9 மணி). தினமும் ராமேசுவரம் புறப்படும் விரைவு ரயில் அதிகாலை 4.40 மணிக்கு வரும் (பழைய நேரம் 4.55).  
காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து பல்லவன் விரைவு ரயில் தினமும் காலை 5.05 மணிக்கு புறப்படும்.  ராமேசுவரம்-திருச்சி பயணிகள் ரயில் காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து
மாலை 6 மணிக்குப் புறப்படும். இதனால் திருச்சியில் இரவு 8.35 மணிக்கு புறப்படும் பெங்களூர் விரைவு ரயிலில் மாறிச் செல்லமுடியும். திருச்சியிலிருந்து விருதுநகர் செல்லும் பயணிகள் ரயில் காரைக்குடியிலிருந்து மாலை 5.50 மணிக்குப் பதிலாக 6 மணிக்குப் புறப்படும்.  
இந்த நேரம் மாற்றங்கள் நவம்பர் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com