சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் காலமான முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடலுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உடல்நலக்குறைவால் செ.மாதவன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவரது இறுதிச்சடங்கு புதன்கிழமை சிங்கம்புணரியில் நடைபெற்றது. முன்னதாக பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
சிங்கம்புணரி வந்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், செ.மாதவன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது மனைவி தனலெட்சுமி, மகன், மகள்களுக்கு ஆறுதல் கூறினார். தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். மாலையில் நடைபெற்ற இறுதிச்சடங்கு ஊர்வலத்திலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர், சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலையில் உள்ள பொதுமயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
இன்றைய மின்தடை - வேதாரண்யம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


